Month: January 2022

மராட்டியம், தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: மராட்டியம், தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பரவல் கவலைக்குரிய நிலையில் உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 94% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 15- 18 வயதுக்குட்பட்ட சிறார்களில் 52% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தகவளித்துள்ளது.

தீவிரவாத தாக்குதலா?: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு..3 பேர் பலி; பலர் படுகாயம்..!!

லாகூர்: இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்த்ததில் 3 பேர் உயிரிழந்தனர். லாகூரில் உள்ள அனார்கலி சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பால் லோஹரி கேட் பகுதியில் கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள், மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. வணிகநகரமான லாகூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் தீவிரவாத தாக்குதலா என சந்தேகம் எழுந்துள்ளது.

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்; இலங்கை சிறையில் உள்ள 56 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் உறுதி

இராமேஸ்வரம்: நாளை தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இலங்கை சிறையில் உள்ள 56 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மீனவர்களிடம் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். சென்னையில் நடந்த மீனவர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் உறுதி அளித்ததை அடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

பின்னலாடை துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நன்றி..!!

திருப்பூர்: பின்னலாடை துறையின் கோரிக்கைகளை நிறைவேற்ற கடிதம் எழுதிய முதலமைச்சருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தியை பாதிக்கும் பிரச்னை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பருத்திக்கு விதிக்கப்படும் 11 சதவீதம் இறக்குமதி வரியை நீக்கவும், ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடாரை ஆஜர் செய்த போலீஸ்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடாரை திருவான்மியூர் போலீஸ் ஆஜர்படுத்தினர். சீமான் மீது புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரிநாடார் மீது வழக்கு பதியப்பட்டது. பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிநாடாரை திருவான்மியூர் போலீஸ் ஆஜர்படுத்தினர்.  

ஐஏஎஸ் கேடர் விதிகளில் மாற்றம் கொண்டுவரக்கூடாது!: பிரதமருக்கு மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்..!!

கொல்கத்தா: ஐஏஎஸ் கேடர் விதிகளில் உள்ள வரைவு திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். ஐஏஎஸ் கேடர் விதிகளில் மாற்றம் கொண்டுவரக்கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா?: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை விளக்கும் வகையில் அறிக்கை தாக்கல் செய்யபடவேண்டும். வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு- செம்மஞ்சேரி கட்டப்படும் காவல்நிலையம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மனு அளிக்கப்பட்டுள்ளது.    

കെ റെയില്‍ വിശദീകരണ യോഗത്തില്‍ യൂത്ത് കോണ്‍ഗ്രസ് പ്രവര്‍ത്തകര്‍ക്ക് നേരെ ഡിവൈഎഫ്‌ഐ അക്രമം; പ്രതികരണവുമായി കോണ്‍ഗ്രസ് നേതാക്കള്‍

കണ്ണൂരില്‍ കെ റെയില്‍ പദ്ധതിയുടെ വിശദീകരണ യോഗം നടക്കുന്ന ഹാളിലേക്ക് പ്രതിഷേധം സംഘടിപ്പിച്ച  യൂത്ത് കോണ്‍ഗ്രസ് പ്രവര്‍ത്തകരെ  ആക്രമിച്ച് ഡിവൈഎഫ്‌ഐ പ്രവര്‍ത്തകര്‍. പോലീസ് നോക്കിനില്‍ക്കെയാണ് യൂത്ത് കോണ്‍ഗ്രസ് പ്രവര്‍ത്തകരെ ഡിവൈഎഫ്‌ഐ പ്രവര്‍ത്തകര്‍ അക്രമിച്ചത്. റിജില്‍ മാക്കുറ്റി, സുദീപ് ജെയിംസ്, വിനേഷ് ചുള്ളിയാന്‍, പ്രിനില്‍ മതുക്കോത്ത്, യഹിയ, ജെറിന്‍ ആന്റണി തുടങ്ങിയ യൂത്ത് കോണ്‍ഗ്രസ്സ് നേതാക്കള്‍ക്ക്  സംഭവത്തില്‍ പരിക്കേറ്റു.  മന്ത്രി എംവി ഗോവിന്ദന്‍ പങ്കെടുത്ത യോഗത്തിലാണ് യൂത്ത് കോണ്‍ഗ്രസ് നേതാക്കള്‍ പ്രതിഷേധവുമായി എത്തിയത്. പൗരപ്രമുഖരുടെ പാര്‍ട്ടി ജനാധിപത്യ പ്രതിഷേധങ്ങളെ […]

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகள்: காணொலி வாயிலாக திறந்துவைத்தார் முதல்வர்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ரூ.4,600 கோடி மதிப்பில் செயலப்படுத்தப்பட இருப்பதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் தமிழ்நாடு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் ரூ.56,20,30,000 மதிப்பீட்டில் 46 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 35,42,93,000 மதிப்பீட்டில் 591 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 13,587 பயனாளிகளுக்கு ரூ.1,57,41,88,000 மதிப்பிலான […]

தேனியில் அனுமதியின்றி ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்-நீதிமன்றம் புதிய உத்தரவு

அரசு நிலத்தில் கிராவல் மண் எடுக்க முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு உடந்தையாக இருந்த புகாரில் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிப்பது குறித்து, தமிழக தொழில் துறை கூடுதல் செயலர் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண் உதவியாளர்கள் […]