Month: May 2022

தமிழகத்தில் அதிகபட்சமாக வீரகனூர், வேப்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வீரகனூர், வேப்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம், வால்பாறை, திருமயத்தில் 4 செ.மீ. மழையும், சீர்காழி, செந்துறை, தொழுதூர், வி.களத்தூர், ஜமுனாமரத்தூர், வாலதி, கரையூர், அருப்புக்கோட்டையிலும் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியது. 

கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூ 3-ல் துவங்கிய நிலையில் இந்தாண்டு ஓரிரு நாட்கள் முன்னதாகவே பருவமழை துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கை பள்ளி திறப்புக்கு முன்பே தொடங்கும் நிலையில் இந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டது. 

காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: உயர்நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்தது. குற்றவாளிகள் காவல்துறையினருக்கு தெரியாமல் தப்பித்து தலைமறைவாக முடியாது; குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டனர் என்ற காவல்துறை அறிக்கை ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என தெரிவித்தது

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும்: முதல்வர் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மதவாத நச்சு விதைகளை தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

டெல்லி: சீன நாட்டினருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 62-வது பழக் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக் கண்காட்சி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில் 25 அரங்குகள் பழக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. பழங்களைக் கொண்டு தாஜ்மஹால், கோயில் தேர் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  

கலைஞர் சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞர் சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதையில் பெருமிதம். கலையானாய் காவலானாய் களத்துக்கு வேல்கள் செய்யும் உலையானாய்; இறந்தும் வாழும் உயிரானாய் என வைரமுத்து டுவீட் செய்தார்.   

ഇനി മുതൽ വൈദ്യുതിയും പ്രീപെയ്ഡ്; സ്മാർട്ട് മീറ്റർ സംവിധാനം അടുത്തവർഷം മുതൽ; സംസ്ഥാനത്ത് പദ്ധതി നടപ്പാക്കുക നാല് ഘട്ടങ്ങളിലായി; കേന്ദ്ര വിജ്ഞാപനമായി

ന്യൂഡൽഹി : മുൻകൂറായി പണമടച്ചു വൈദ്യുതി ഉപയോഗിക്കാൻ കഴിയുന്ന പ്രീപെയ്ഡ് സ്മാർട് മീറ്റർ സംവിധാനം രാജ്യമാകെ നിർബന്ധമാക്കുന്നതിന്റെ ആദ്യഘട്ടം 2023 ഡിസംബർ 31നു മുൻപു പൂർത്തിയാക്കണമെന്നു കേന്ദ്ര വിജ്ഞാപനം. ബ്ലോക്ക് തലത്തിനു മുകളിലുള്ള എല്ലാ സർക്കാർ ഓഫിസുകളും വ്യാവസായികവാണിജ്യ ഉപയോക്താക്കളും ഈ തീയതിക്കുള്ളിൽ പ്രീപെയ്ഡ് മീറ്ററിലേക്കു മാറണം. ഉപയോഗിച്ച വൈദ്യുതിയുടെ കണക്കെടുത്താണു നിലവിൽ ബിൽ നൽകുന്നതെങ്കിൽ പ്രീപെയ്ഡ് മീറ്റർ വരുമ്പോൾ മുൻകൂറായി പണം നൽകി റീചാർജ് ചെയ്യണം. മൊബൈൽ ആപ്പ് ഉപയോഗിച്ച് മീറ്റർ റീചാർജ്…

ഇന്ത്യ- യുഎഇ സെക്ടറിൽ വിമാന ടിക്കറ്റുകൾക്ക് ചിലവേറുന്നു.

ഇന്ത്യ- യുഎഇ സെക്ടറിൽ വിമാന ടിക്കറ്റുകൾക്ക് ചിലവേറുന്നു. യുഎഇയിൽ നിന്നും ഈ വേനൽക്കാലത്ത് നാട്ടിലേക്ക് മടങ്ങാൻ ആലോചിക്കുന്ന പ്രവാസി ഇന്ത്യക്കാർ ഇപ്പോൾ തന്നെ ആ ബുക്കിംഗുകൾ ആരംഭിക്കണം, ടിക്കറ്റുകൾക്ക് 2019 ലെ നിലവാരത്തേക്കാൾ 10-25 ശതമാനം കൂടുതൽ ചിലവാണ് പ്രതീക്ഷിക്കുന്നത്. ദുബായിൽ നിന്ന് മുംബൈയിലേക്കുള്ള വിമാനങ്ങൾക്ക് 300 ദിർഹം മുതൽ 400 ദിർഹം വരെ വൺവേ ഈടാക്കുന്നുണ്ടെങ്കിലും ജൂലൈയിൽ നിരക്ക് 1,000 ദിർഹത്തിൽ കൂടുതലായി ഉയരുന്നതായി കാണുന്നു. ദുബായിൽ നിന്ന് കൊച്ചിയെ ബന്ധിപ്പിക്കുന്ന ഒരു വിമാന ടിക്കറ്റിന് […]