• Tue. Dec 3rd, 2024

24×7 Live News

Apdin News

ஃபெஞ்சல் புயல்: எங்கு, எப்போது கரையை கடக்கும்?- மதியம் 1 மணி வரை மழை நிலவரம்

Byadmin

Nov 30, 2024


 புயலாக உருவானது

பட மூலாதாரம், IMD.GOV.IN

படக்குறிப்பு, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானது

வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (நவம்பர் 30) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 21 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin