0
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்ற அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நாட்டை அமைதியான வகையில் பேணிவர அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என அதிட்டன முப்படை கூட்டமைவின் பிரதானி இளைப்பாறிய மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை (02) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி இளைப்பாறிய முப்படைக் கூட்டமைவின் ஊடக சந்திப்பின் போதே அதிட்டன முப்படை கூட்டமைவின் பிரதானி இளைப்பாறிய மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களின் இராணுவ அங்கத்தவர்கள் தரைப்படை, கடற்படை, விமானப்படை அங்கத்தவர்கள் என்ற வகையில் நீண்டகாலம் கடமை புரிந்து உயர் தோ்ச்சியைப் பெற்று ஆற்றல்களை விருத்தி செய்து சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக வாழ்கிறார்கள்.
தேசிய மக்கள் சக்தியுடன் இளைப்பாறிய முப்படைக்கூட்டமைவின் அதிட்டன கூட்டமைவில் ஏறக்குறைய 40,000 போ் நாட்டில் முனைப்பாக செயலாற்றி வருகிறார்கள்.
இந்த நாட்டுக்காக ஒழுக்கமுடையவர்களாக பொறுப்புக்களை வெற்றிகரமாக ஈடேற்றி இளைப்பாறியுள்ளதோடு இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள கவலைக்கிடமான நிலைமையை எம்மால் தெளிவாக காணக்கிடைத்தது.
இந்த நிலைமையிலிருந்து மீண்டெழ நாம் ஈடேற்ற வேண்டிய செயற்பொறுப்பினை ஈடேற்றல் பற்றி விசாரித்தறியும்போது தேசிய மக்கள் சக்தி முன்னோக்கி வருகின்ற விதத்தை நாங்கள் கண்டோம்.
அவர்களுடன் நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி எமது இரண்டாவது அரும்பணியாக 2021 இறுதியில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் அதிட்டன கூட்டமைவினை அமைத்துக்கொண்டோம்.
கழிந்து சென்ற இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டுக்கு வெளியில் இருக்கின்ற எமது இளைப்பாறியவர்கள் கூட விசேட அர்ப்பணிப்பினை செய்தார்கள்.
நாங்கள் பெற்றுள்ள தொழில்சார் அறிவையும் ஆற்றலையும் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றுசோ்ந்து வழங்கத் தொடங்கினோம்.
எமது இளைய தலைமுறையினரைப் போன்றே ஒட்டுமொத்த மக்களையும் நாங்கள் நேசிக்கிறோம். நாங்கள் முனைப்பான சேவையில் இருந்த காலத்தில் மனிதப் பண்புடையவர்களாக மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட அனுபவங்களை உச்சளவில் பயன்படுத்தி இந்த விசேட பணிக்காக எமது ஒத்துழைப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
அதனால் ஏனைய கட்சிகளும் அரசாங்கமும் நினைத்துப் பார்க்காத அதிர்ச்சிக்கு இலக்காகியுள்ளன. தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அரசியலில் ஈடுபட்டுள்ள கட்சிகளும் குழுக்களும் அதிட்டன முப்படைக் கூட்டமைவு சம்பந்தமாக பல்வேறு சேறுபூசல்களையும் குறைகூறல்களையும் எடுத்தியம்புகின்ற வீடியோக்களையும் போஸ்ட்களையும் ஊடகங்களில் பிரசுரித்து வருகின்றன.
திசைக்காட்டிக்கு எதிராக செயலாற்றி வருகின்ற அரசியல் கட்சிகள்கூட ஊடக சந்திப்புக்களை நடத்தி அதிட்டன கூட்டமைவின் செயற்பாடுகள் பற்றி போலியான, பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
அதனால் யுத்தம் நடைபெற்ற கடந்த காலத்தில் இந்த அங்கத்தவர்கள் பாரிய மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் என்பதை முதலிலேயே வழியுறுத்தினேன். நாங்கள் தேசிய மக்கள் சக்தியை நம்புகிறோம்.
அதைப்போலவே எமது செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். வளமான நாடு – அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நோக்குடன் செயலாற்றி வருவதோடு கொள்கை ரீதியாக செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தோ்தலுக்கு உச்சளவிலான ஒத்துழைப்பினை வழங்கி மிகவும் அமைதியான தோ்தலுக்கு இடவசதி ஏற்படுத்திக் கொடுப்போம்.
அதன் பின்னரும் அமைதிச்சூழலை பேணிவருவது எமது தலையாய கடமையும் பொறுப்புமாகும். அதனை நாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டதாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஈடேற்றுவோம்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகின்ற அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த நாட்டை அமைதியான வகையில் பேணிவர அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
எங்கள் கூட்டமைவு நாட்டு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதற்காக அமைத்துக்கொண்ட ஒரு கூட்டமைவு அல்ல. தீவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூலைமுடுக்குகள்தோறும் சென்று தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரான அநுர குமார திசாநாயக்கவின் பெருவெற்றிக்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம்.
செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிலே பாரிய கலவரங்களை ஏற்படுத்துவதாகவும் அதில் அதிட்டன இளைப்பாறிய முப்படை கூட்டமைவை சோ்ந்தவர்கள் தொடர்புபடுவதாகவும் சேறுபூசிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறான குறைகூறல்களுக்கு செவிசாய்க்க வேண்டாமென நான் மிகுந்த பொறுப்புடன் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் கிடையாது.
நாங்கள் அடிமட்டத்திலிருந்து முப்படையிலிருந்து இளைப்பாறியவர்களை சந்தித்த பின்னரே இந்த கூட்டமைவினை கட்டியெழுப்பினோம். அதனால் இந்த கூட்டமைவு மண்ணில் வளர்ந்த ஆணிவேரைக்கொண்ட மாபெரும் விருட்சமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்று சோ்ந்துள்ளது.
எதிர்வரும் ஐந்தாம் திகதியும் ஆறாம் திகதியும் தபால் மூல வாக்குகளை அளிக்கையில் முப்படை அங்கத்தவர்களுக்கும் அந்த வாய்ப்பு உரித்தாகியிருக்கின்றது. எம்முடன் கடமையாற்றியவர்கள் என்ற வகையில் இந்த நாட்டுக்கு நோ்ந்துள்ள அவல நிலை பற்றி அனைவருக்கும் மிகச் சிறந்த புரிந்துணர்வு இருக்கிறது.
அதனால் தபால் மூலம் வாக்களிக்கையில் விவேகமுள்ளவர்களாக நன்றாக சிந்தித்துப்பார்த்து செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். முப்படை அங்கத்தவர்களுக்கு இற்றைவரை சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள எந்தவொரு வசதியும் குறைவடைய மாட்டாது என்பதையும் குறிப்பாக கொள்கை ரீதியாக தேசிய மாகாநாட்டில் பிரகடனம் செய்துள்ளோம்.
முப்படையினரின் நன்மதிப்பு, அடையாளம் மற்றும் சட்டப்பூர்வமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வசதிகள் எதுவுமே குறைக்கப்படமாட்டாதென்பதை உறுதி செய்கிறோம். நாங்கள் கூறிய விடயங்களை திரிபுபடுத்தி பிரச்சாரம் செய்யுமளவிற்கு ஒரு சில குழுக்கள் அச்சமடைந்திருக்கின்றன. நாட்டின் அழிவிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அவ்விதமாக செயலாற்றி வருவதை நாங்கள் காண்கிறோம்.
சிவில் பாதுகாப்பு படையணி ஆற்றல் மிகுந்த ஏறக்குறைய 30,000 அங்கத்தவர்களை கொண்டதாக நாடு பூராவிலும் இயங்கி வருகிறது. அவர்களின் நன்மதிப்பை பாதுகாக்கின்ற வகையில் அவசியமான பயிற்சிகளை வழங்கி நாட்டுக்கு பயனுள்ள பணிகளில் ஈடுபடுத்துவோம்.
அவர்களின் தொழில் உறுதி நிலையை பாதுகாப்போம். இறந்த மற்றும் காணாமல் போன முப்படை அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களுடன் தேசிய மக்கள் சக்தி நீண்ட உரையாடல்களை மேற்கொண்ட பின்னர் அதற்கான வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது.
அதைப்போலவே ஓய்வூதியத்தில் நிலவுகின்ற முரண்பாடுகளை முடிவுறுத்த நடவடிக்கை எடுப்போம். செப்டெம்பர் 18 ஆம் திகதி நள்ளிரவுடன் தோ்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் தோ்தல் முடிவடையும்வரை எங்களுடைய டீசேட்டுக்களை அணிய முடியாது.
அந்த காலப்பகுதிக்குள் அதிட்டன டீசேட்க்களை அணிந்து செயலாற்றினால் அவர்கள் எங்களுடைய அங்கத்தவர்கள் அல்ல. அதிட்டன டீசேட்களை பாவித்து வீடியோ கிளிப் தயாரித்து போலியான கருத்தியல்களை முன்வைத்திருந்தார்கள்.
செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நாங்கள் ஏதாவது பணியை மேற்கொள்வதாயின் இவ்விதமாக பகிரங்க ஊடக சந்திப்பினை நடாத்தி மக்களுக்கு விடயங்களை எடுத்துரைப்போம். இதற்கிணங்க எங்களுடைய செயற்பாடுகள் பற்றி மக்கள் வெளிப்படைத்தன்மையுடன் விளங்கிக்கொள்வது வசதியானதாக அமையும்.
தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் அடைந்துள்ள மாபெரும் வரவேற்பின் மத்தியில் பின்வாங்கியுள்ள குழுவினர் அவர்களின் அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்காக செயலாற்றுகின்ற விதத்தை மக்களால் இந்நாட்களில் நன்றாக விளங்கிக்கொள்ள முடியும்.
அதனால் சமூக வலைத்தளங்களை பாவித்து வருங்காலத்தில் பரிமாற்றிக்கொள்ளப்படுகின்ற பொய்யான விடங்களைக் கண்டு ஏமாந்து விடவேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என்றார்.