• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் – 47 ஆண்டுகளுக்கு பிறகு யார் என கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

Byadmin

Sep 5, 2024


47 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை தற்போது அடையாளம் கண்டது எப்படி?

பட மூலாதாரம், Berks County Coroner’s Office

படக்குறிப்பு, நிக்கோலஸ் பால் க்ரூப்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு குகையில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மனிதரின் உடல் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவின் ஃபோர்ட் வாஷிங்டனைச் சேர்ந்த 27 வயதான நிக்கோலஸ் பால் க்ரூப் என்பவரது சடலம் அது என பெர்க்ஸ் கவுண்டி மரண விசாரணை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இறுதியாக ‘மலைமுகடு மனிதர்’ என அழைக்கப்படும் க்ரூப்பின் கைரேகைகளைக் கண்டறிந்து, கண்டெடுக்கப்பட்ட உடலின் கைரேகைகளுடன் பொருத்தி பார்த்த பிறகு, உண்மையான அடையாளத்தை கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலடெல்பியாவிலிருந்து வடமேற்கே 122 கிமீ தொலைவில் அல்பானி டவுன்ஷிப் என்னும் மலையேற்றப் பகுதி உள்ளது. அங்குள்ள மலை முகடுக்கு கீழே உள்ள ஒரு குகையில் உறைந்த நிலையில் க்ரூப்பின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

By admin