• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; நால்வர் பலி

Byadmin

Sep 5, 2024


அமெரிக்காவில் ஆங்காங்கோ துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகிறது. அதிலும் பாடசாலைகளில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இவ்வாண்டு மாத்திரம் 45 பாடசாலைகளில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனமாக CNN அறிக்கையிட்டுள்ளது.

45ஆவது சம்பவமாக அமெரிக்கா – Georgia மாநிலத்தில் ஓர் உயர்நிலைப் பாடசாலையில் நேற்று புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இது மிக மோசமான துப்பாக்கிச் சூடு என CNN சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நத் துப்பாக்கிச்சூட்டில் இரு மாணவர்களும், ஆசிரியர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து, அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்தார். அத்துடன், துப்பாக்கிக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டுமென்று அவர் மீண்டும் அழைப்பு விடுத்தார்.

அந்தச் சம்பவத்தை அமெரிக்க மக்கள் இனியும் சாதாரணமாகக் கருதக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

துணையதிபரும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அதுபோன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவித்தார்.

By admin