• Sat. Nov 2nd, 2024

24×7 Live News

Apdin News

அயல் வீட்டாரின் வளர்ப்பு நாயை சுட்டுக்கொலை செய்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு விளக்கமறியல்

Byadmin

Nov 1, 2024


அயல் வீட்டாரின் வளர்ப்பு நாயை சுட்டுக்கொலை செய்ததாக கூறப்படும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பிக்க கயான் பெரேரா என்ற 55 வயதுடைய நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கடந்த 28 ஆம் திகதி அன்று தனது வீட்டிலிருந்து வெளியே செல்ல முற்பட்ட போது அயல் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இவரைப் பார்த்து சத்தமாக குரைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி தனது வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து நாயைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By admin