• Mon. Sep 9th, 2024

24×7 Live News

Apdin News

அலைபேசி, தொலைக்காட்சியில் இருந்து குழந்தைகளை விலக்குமாறு சுவீடனில் அறிவுறுத்தல்!

Byadmin

Sep 3, 2024


சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அலைபேசி மற்றும் தொலைக்காட்சியில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் குழந்தைகளை அலைபேசியை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்றும் பெற்றோரை நாட்டின் பொது சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே அலைபேசி மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்.

6 முதல் 12 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரத்திற்கு பார்க்கலாம். 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மட்டுமே அலைபேசி மற்றும் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்க வேண்டும்.

குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன் அலைபேசி உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம். இரவில் படுக்கையறைக்கு வெளியே அலைபேசி மற்றும் டேப்லெட்டுகள் வைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுச் சுகாதார அமைச்சர் ஜாகோப் போர்ஸ்மெட் கூறும்போது, “13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6 மணிநேரம் பாடசாலை நேரத்திற்கு வெளியே அலைபேசி மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிடுகிறார்கள். பாடசாலை நடவடிக்கைகள், உடல் செயல்பாடு, போதுமான தூக்கம் ஆகியவற்றிற்கு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. 15 வயதுடையவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு போதுமான தூக்கம் இல்லை” என்றார்.

குழந்தைகள் அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அலைபேசி, தொலைக்காட்சியில் இருந்து குழந்தைகளை விலக்குமாறு சுவீடனில் அறிவுறுத்தல்! appeared first on Vanakkam London.

By admin