• Sat. Jul 13th, 2024

24×7 Live News

Apdin News

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி – என்ன பேசினார்?

Byadmin

Jul 7, 2024


ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் தேசியத் தலைவர் மாயாவதி

பட மூலாதாரம், BSP – TAMIL NADU UNIT/FB

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணியளவில் அவரது வீட்டின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடல், சனிக்கிழமை (ஜூலை 6) மாலை அவரது அண்ணன் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அயனாவரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பெரம்பூரிலிருக்கும் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

By admin