• Tue. Dec 3rd, 2024

24×7 Live News

Apdin News

இசைவாணி மீது நடவடிக்கை கோரி குமரி எஸ்.பி அலுவலகத்தில் மனு | Defamatory song about Lord Ayyappa: Petition filed against Isaivani at Kanyakumari SP office

Byadmin

Nov 26, 2024


நாகர்கோவில்: சபரிமலை சுவாமி ஐய்யப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடி பதிவிட்டதாக பாடகர் இசைவாணி மீது புகார் எழுந்துள்ளது. இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் காவல் துறையில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுவாமி ஐய்யப்பன் குறித்து அவதூறு பாடல் வெளியிட்ட இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில், இந்து தமிழர் கட்சி சார்பில் இன்று (நவ.26) புகார் மனு அளிக்கப்பட்டது. குமரி மாவட்ட தலைவர் ஆர்.ராஜன் தலைமையில் திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு மாநில தலைவர் சங்கர், மாவட்ட வக்கீல் அணி தலைவர் செந்தில்நாதன், தொழிற்சங்க தலைவர் சதீஷ், மாவட்ட மகளிர் அணித் தலைவி ஆனந்தி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



By admin