4
அலைகடலென திரண்டு செந்தில் வடிவேலவனின் விழாக்கோலம் காண வந்த அடியவர்கள் “அரோகரா” என்று வானுயரக் கைகூப்பி வயிற்றிலிருந்து குரல் எடுத்து கூப்பிட்டு கும்பிட்டார்கள் என்று பார்த்தால் அனைவர் கையிலும் “செல்லிடப்பேசிகள்”
“ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி” வழிபடுகிறார்கள் என்று பார்த்தால் “போனினை” உயர்த்தி “செல்லொளி” பெருக்கி shooting அல்லவா நடத்துகிறார்கள்.
Capital TV ,Shakti TV என்று தொலைக்காட்சி அலை வரிசைகள் எல்லாம் கூடி நிகழ் நிலையில் அனைத்தையும் ஒளிபரப்ப மனதார முருகனை கும்பிடாமல் ஏன் இந்த வேலை?
உண்மையிலேயே கும்பிடும் மனநிலையோடு வந்தவர்களும் இதனால் குழம்பி அல்லவா போயிருப்பார்கள்?
எந்தெந்த இடத்துக்கு எந்தெந்த சிந்தனையோடு செல்ல வேண்டும் என்ற மனநிலை முதிர்ச்சி நம் அனைவருக்கும் கட்டாயம் வேண்டும். செத்த வீட்டில் பிணத்தோடு செல்பி எடுப்பது, கல்யாண வீட்டில் “நிறுத்துங்கள்” என்று சொல்லி “இப்போது கட்டுங்கள்”என்று தாலி கட்டும்போது தடை செய்வது என்று எங்கள் அழிச்சாட்டியங்கள் இன்னும் என்னென்ன அரங்கேற்ற போகிறோமோ?
என் மனதில் எழுந்த ஆதங்க எண்ணங்களின் வரி வடிவமே இவை தவறேதும் இருப்பதாக தோன்றவில்லை.
நம் பிள்ளைகளை ஆவது ஒருமித்த சிந்தையோடு இறையருள் பெற என்று வழிபட கற்றுக் கொடுப்போம்.
M.கோகுலன்