• Tue. Jul 16th, 2024

24×7 Live News

Apdin News

இந்தியன்-2: ரஜினிக்காக உருவான கதையில் நுழைந்த கமல்; மீண்டும் ஒருமுறை ‘மேஜிக்’ செய்ய முடியுமா?

Byadmin

Jul 11, 2024


கமல்

பட மூலாதாரம், LYCA productions

படக்குறிப்பு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது.

இந்தியன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தியன், இந்த முறையும் அதனை நிகழ்த்துமா?

1996-ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் ‘இந்தியன்’ படத்தின் விளம்பரம் வெளியானபோது, சினிமா ரசிகர்களிடம் ஒரே பரபரப்பு. முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு, குருதிப் புனல் படத்தைத் தந்திருந்த கமல், அடுத்ததாக இயக்குநர் ஷங்கருடன் கைகோர்த்திருந்தார்.

ஜென்டில்மேன், காதலன் படங்களுக்குப் பிறகு ஷங்கருக்கு மூன்றாவது படம் இந்தியன். படத்தைத் தயாரித்தவர் ஏ.எம். ரத்தினம். ஜென்டில்மேன் படத்தை அதே பெயரிலும் காதலன் படத்தை ப்ரேமிக்குடு என்ற பெயரிலும் தெலுங்கிலும் வெளியிட்டு லாபம் பார்த்திருந்த ஏ.எம். ரத்தினம் ஷங்கருடன் இணைந்து நேரடியாகவே ஒரு தமிழ் படத்தை இயக்க முன்வந்திருந்தார்.

மீண்டும் இந்தியன்: பழைய மேஜிக்கை நிகழ்த்துமா?

பட மூலாதாரம், Indian Movie

படக்குறிப்பு, ஜென்டில்மேன், காதலன் படங்களுக்குப் பிறகு ஷங்கருக்கு மூன்றாவது படம் இந்தியன்.

ரஜினிக்காக உருவாக்கிய கதை

இந்தியன் படத்தின் கதை முதலில் ரஜினிகாந்திற்காக உருவாக்கப்பட்டது என தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிடுகிறார் அந்தப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த இயக்குநர் வசந்தபாலன்.

By admin