இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Advertisement

01. 3 நக்சலைட்கள் பலி
பாட்னா: பீஹாரின் கயா மாவட்டம் பராச்சட்டி வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்களை, நேற்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த, ‘என்கவுன்டரில்’ மூன்று நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

latest tamil news

02. தேடப்படும் ஆளில்லா விமானம்
ஜம்மு: பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் உதவியுடன் ஆயுதங்கள், போதை பொருட்களை பாகிஸ்தான் வழங்குகிறது. இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் பறந்தது. அதனை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் நேற்று கூறினர்.

03. மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
பெங்களூரு: மோசடி வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க்கை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

தமிழக நிகழ்வு

01.அனுப்பர்பாளையம்: டிவைடரில் பைக் மோதி வாலிபர் பலி, ஒருவர் காயம்

02.திருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.2 கிலோ தங்கத்தை, திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

03.குளித்தலை: குளித்தலை அருகே, 15 வயது பள்ளி சிறுமிக்கு பிரசவமான நிலையில், இறந்து பிறந்த சிசுவை புதைத்த, காதலனின் பெற்றோர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

04.மதுரை: மதுரை விளக்குத்துாண் பகுதி துணிக் கடையில், நவ., 14ல் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்த சோகம் மறையாத நிலையில், அதே பகுதியில், மூன்று மாடி கட்டடத்தில் உள்ள, துணிக்கடை குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமாயின.

Advertisement
Dinamalar iPaper
அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை!

அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமன சர்ச்சை!

முந்தய
 மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

அடுத்து

வாசகர் கருத்து