• Sat. Mar 25th, 2023

24×7 Live News

Apdin News

இம்ரான் கான் வீட்டை உடைத்து புகுந்த காவல்துறை, விபத்திற்கு உள்ளான கான்வாய் – என்ன நடக்கிறது?

Byadmin

Mar 18, 2023


இம்ரான் கான்

பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு தாம் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை, அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக இம்ரான் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென இம்ரான் கான் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும், இந்த வழக்குகள் மட்டுமின்றி, பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் இம்ரான் கானை போலீசார் ஆஜர்படுத்த வேண்டுமென இஸ்லாமாபாத் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது போலீசாருக்கும் இம்ரான் கானுடைய கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.