• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா?

Byadmin

Jul 5, 2025


இலங்கை மனித புதை குழியில் சிறார் எலும்புகள்: சரணடைந்த 29 குழந்தைகள் புதைக்கப்பட்டார்களா?

பட மூலாதாரம், BBC Sinhala

இலங்கையில் யாழ்ப்பானம் செம்மணி – சிந்துப்பாத்தி பகுதிகளில் கண்டறியப்பட்ட மனிதப் புதைக்குழியில் சிறுவர்களின் எலும்புகள், பொம்மைகள், புத்தகப் பைகள் கிடைத்துள்ள நிலையில், இவை இறுதி யுத்தக் காலத்தில் ராணுவத்திடம் சரணடைந்த 29 குழந்தைகளுடையதா என்ற சந்தேகத்தை வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் எழுப்பியுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

குழந்தைகளின் எலும்புக்கூடுகள்

இலங்கையில், யாழ்ப்பானத்தில் அமைந்துள்ள செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைக்குழியிலிருந்து இதுவரை 40 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 34 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, சட்ட மருத்துவ அதிகாரியின் கண்காணிப்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மனிதப் புதைக்குழியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

அத்துடன், மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சாட்சிப் பொருட்கள் வழக்கு எண்களின் அடிப்படையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

By admin