கடந்த ஏப்ரல் மாதம் இரான் இஸ்ரேலைத் தாக்கியபோது, அந்தத் தாக்குதல் இரானின் நிலைப்பட்டை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று தோன்றியது. இம்முறை கதையே வேறு. இரான் இஸ்ரேலில் சில கடுமையான சேதங்களைச் செய்ய விரும்புவதைப் போலத் தோன்றுகிறது. தனது நிலைப்பாட்டை ஆக்ரோஷமாகப் பதிவு செய்ய விழைவது போலவும்.