• Sat. Jan 28th, 2023

24×7 Live News

Apdin News

இ.ராமதாஸ் காலமானார்: இயக்குநரும் நடிகருமான இவர் ‘வசூல் ராஜா’ ‘விக்ரம் வேதா’ போன்ற படங்களில் நடித்துள்ளார்

Byadmin

Jan 24, 2023


இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார்

பட மூலாதாரம், E.Ramadoss/Facebook

திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். பல திரைப்படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தியுள்ள ராமதாஸ், ஒரு சிறந்த நடிகரும்கூட.

சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், நேற்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், இரவு பத்து மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார்.