வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெரம்பலுார்-”தி.மு.க.,வின், 20 மாத ஆட்சியில், ‘கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்’ தான் நடக்கிறது,” என, அரியலுார் பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
![]() |
அரியலுாரில் நேற்று இரவு எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
அதில், அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
நாட்டு மக்களுக்காக உழைத்தவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. வீட்டு மக்களுக்காக உழைப்பவர் ஸ்டாலின். எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.,வினரே வாரிசுகள்.
![]() |
தி.மு.க., ஆட்சி, ஸ்டாலின் குடும்பத்திற்கான ஆட்சி. தமிழகத்தில் பொம்மை முதல்வர்ஆட்சி நடத்துகிறார். திறமையற்ற முதல்வராக ஸ்டாலின் உள்ளார். அவரது குடும்பம் தான் பிழைத்துக் கொண்டிருக்கிறது.
தி.மு.க., ஆட்சியில் ‘கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்’ தான் நடைபெற்று வருகிறது.
நல்ல கலெக் ஷன் கொடுக்கும் அமைச்சர்களே, ஸ்டாலினுக்கு சிறந்த அமைச்சர்கள். கமிஷன், கலெக் ஷன்,கரப்ஷன் மட்டுமே தி.மு.க., அரசின் ஒரே நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement