காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர் போரால் காசாவில் பலருக்கு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ள சூழலில், காசாவில் உள்ள 6.4 இலட்சம் குழந்தைகளுக்கு உலக சுகாதார அமைப்பு போலியோ சொட்டு மருந்து வழங்க முன்வந்தது.
இதற்காக, 8 மணிநேரம் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் படைகள் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், போலியோ முகாம் செயல்பட தொடங்குவதற்கு முன்னதாக, நாசர் மருத்துவமனை பகுதியில் அடையாள முகாம் நடத்தி, சில குழந்தைகளுக்கு மருத்துவ அதிகாரிகள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.
இதன்போது, இஸ்ரேல் படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், நசீரத் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், அவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அத்துடன், காசாவில் தொடர்ந்து நடந்த தொடர் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 49 பேர் வரை மொத்தம் உயிரிழந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post காசாவில் போலியோ முகாம்; இஸ்ரேல் தாக்குதலில் 49 பேர் பலி appeared first on Vanakkam London.