• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

காற்று மாசுபாடு எனும் சத்தமில்லா கொலையாளி- உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

Byadmin

Sep 6, 2024


புதுதில்லி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டெல்லியில் போக்குவரத்து காவலர் ஒருவர் காற்று மாசுபாட்டில் இருந்து தற்காத்துக் கொள்ள முகமூடி அணிந்துள்ளார்

நம்மை கொல்லும் ஒரு ஆபத்து சத்தமில்லாமல் தெருக்களில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதை நம்மால் பிடிக்க முடியாது. அதிலிருந்து நாம் ஒளிந்துகொள்ள பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் நாற்பது லட்சம் இறப்புகளை ஏற்படுத்தும் மற்றும் உலக மக்கள்தொகையில் 99 சதவிகிதத்தினரை பாதிக்கும் காற்று மாசுபாடு ஒரு பெரிய பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மாசுபடுத்திகளால் அதிக தூரம் பயணிக்க முடியும். எனவே அவை அசல் மூலங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளையும் பாதிக்கிறது.

தனிநபர்களால் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் ஓரளவு தாக்கத்தையே ஏற்படுத்தமுடியும். இந்தச்சிக்கலை உண்மையிலேயே சமாளிக்க, அரசுகள் மற்றும் பெருவணிகங்களின் நடவடிக்கை தேவைப்படுகிறது.

By admin