• Tue. Sep 27th, 2022

24×7 Live News

Apdin News

கைதான பா.ஜ., தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு| Dinamalar

Byadmin

Sep 23, 2022


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : வையில் கைதான பா.ஜ., மாவட்ட தலைவர் மீதான முதல் தகவல் அறிக்கையில், கூடுதலாக எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதி தி.மு.க., எம்.பி., ராஜா, இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை கண்டித்து, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கோவை பீளமேட்டில், ஹிந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார்.

இது தொடர்பாக, கலவரத்தை துாண்டுதல், அமைதியை சீர்குலைத்தல், இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்

latest tamil news

.எப்.ஐ.ஆரில், ஏற்கனவே போடப்பட்ட மூன்று சட்டப்பிரிவுடன், கூடுதலாக எஸ்.சி., – எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டு, அதன் நகலை போலீசார் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து, வழக்கு ஆவணங்கள் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. பாலாஜி உத்தம ராமசாமியை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் பா.ஜ., வக்கீல்கள் இன்று, மனு தாக்கல் செய்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement