• Tue. Jan 14th, 2025

24×7 Live News

Apdin News

கோவை: பிறந்த நாளன்று ஆடியோ பதிவிட்டு இறந்த கல்லுாரி மாணவர் – உளவியல் ஆலோசனை தீர்வாகுமா?

Byadmin

Jan 7, 2025


கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

கோவையில் தனியார் கலைக்கல்லுாரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர், சக மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாக கூறி ஆடியோ பதிவிட்டு, தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் இரண்டாவது மகன் சத்யநாராயணன் (வயது 21). இவர் கோவையிலுள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் திருப்பூரிலிருந்து பஸ்சில் கல்லுாரிக்குச் சென்று வந்துள்ளார்.

ஜனவரி நான்காம் தேதியன்று இவருக்குப் பிறந்த நாள். அன்று காலையில் மாடியிலுள்ள இவரது அறையிலிருந்து வெகுநேரமாகியும் வராததால் அவருடைய பெற்றோர் சென்று பார்த்தபோது, அந்த அறைக்குள் தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார்.

By admin