• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

சபீனா மணல் திட்டு: சீனா – பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதல் – நடுக்கடலில் என்ன நடந்தது?

Byadmin

Sep 2, 2024


சீனா - பிலிப்பைன்ஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆகஸ்ட் 19ம் தேதி சீனக் கப்பலும், பிலிப்பைன்ஸ் கப்பலும் மோதிக் கொண்டன. (கோப்புப் படம்)

  • எழுதியவர், டெர்பெயில் ஜோர்டான்
  • பதவி, பிபிசி நியூஸ்

தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் கடலோரக் காவல்படை கப்பல்களைக் கொண்டு மோதியதாக சீனாவும் பிலிப்பைன்ஸும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

தங்கள் நாட்டு கப்பல் மீது சீன கப்பல் நேரடியாக, வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேசமயம், சீனக் கப்பல் மீது பிலிப்பைன்ஸ் கப்பல் “வேண்டுமென்றே” மோதியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சபீனா மணல் திட்டு அருகே சனிக்கிழமை நடந்த மோதல், தென் சீனக் கடலில் உள்ள பல்வேறு தீவுகள் மற்றும் பொருளாதார மண்டலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் சர்ச்சைகளின் சமீபத்திய நிகழ்வாகும்.

கடந்த இரண்டு வாரங்களுக்குள், அதே பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் தொடர்பாக குறைந்தது மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.

By admin