• Sun. Sep 25th, 2022

24×7 Live News

Apdin News

சவாலை சமாளிக்குமா ஆளும் பா.ஜ.,| Dinamalar

Byadmin

Sep 19, 2022


ஆமதாபாத்-குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பல இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இலவச அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆளும் பா.ஜ.,வுக்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.

latest tamil news

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ., அரசு அமைந்துள்ளது.இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை சந்திக்கும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ., தீவிர முனைப்புடன் உள்ளது.

குறிப்பாக குஜராத்தில் வெற்றி பெறுவது அக்கட்சிக்கு கவுரவ பிரச்னை.இந்த சூழ்நிலையில், புதுடில்லியை தொடர்ந்து, பஞ்சாபில் ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தையும் குறிவைத்துள்ளது. குறிப்பாக குஜராத்தில் அந்தக் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது.புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் சென்று பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். மின்சார கட்டணத்தில், 300 யூனிட் வரை இலவசம், குடும்ப பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் ஊக்கத்தொகை உட்பட பல இலவச திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார்.

அதுபோல, குஜராத்தில் நீண்டகாலமாக எதிர்க்கட்சியாகவே உள்ள காங்கிரசும், பிரசார களத்தில் இறங்கிவிட்டது. கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல், சமீபத்தில் குஜராத் வந்திருந்தார். அப்போது, விவசாய கடன் தள்ளுபடி, சமையல் ‘காஸ்’ சிலிண்டரில், 500 ரூபாய் தள்ளுபடி உட்பட பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இது ஆளும் பா.ஜ., வுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘கட்சிகள் இலவச அறிவிப்பு வெளியிடுவது நாட்டின் பொருளாதாரத்துக்கு சீர்கேடு’ என, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், குஜராத் வாக்காளர்களை கவருவதற்காக, மற்ற கட்சிகளைப் போல பா.ஜ.,வும் இலவச அறிவிப்புகளை வெளியிடுமா அல்லது மாற்று பிரசாரத்தில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் இலவச அறிவிப்புகள் ‘மக்களை ஏமாற்றும் வித்தை’ என்ற பிரசாரத்தில் பா.ஜ.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.’ஆட்சிக்கு வர முடியாது என்பது இந்தக் கட்சிகளுக்கு தெரியும். அதனால் தான், இஷ்டத்துக்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ‘மக்கள் வரிப்பணத்தில் இருந்தே இதற்கு செலவிட வேண்டியிருக்கும். அது மக்கள் மீது மேலும் சுமையை ஏற்படுத்திவிடும்’ என, குஜராத் மாநில பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றனர்.

latest tamil news

கெஜ்ரிவால் மீது பா.ஜ., பாய்ச்சல்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் குஜராத் பிரசாரம் குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தற்பெருமைக்காரர். தன்னைப் பற்றி எப்போதும் பெருமையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனே, தன்னைப் பார்த்து பயப்படுவதாகக் கூட, அவர் கூறுவார். அவர் தலைமையிலான புதுடில்லி அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் எல்லாம் ஊழல் வழக்குகளில் சிக்குகின்றனர். அதை மறைப்பதற்காக, அவர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். ஒவ்வொரு தேர்தலின் போதும், தாங்கள் வெற்றி பெறுவோம் எனக் கூறும் பழைய நாடகம், இனி எடுபடாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். குஜராத் எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உள்ளது. இதில் கெஜ்ரிவால் வந்து என்ன செய்யப் போகிறார் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்