• Sun. Jun 7th, 2026

24×7 Live News

Apdin News

சாட்ஜிபிடி, ஜெமினி பயன்படுத்தினாலும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

Byadmin

Jun 1, 2026


ஏஐ உங்கள் மூளையைக் கூழாக்குவதை எப்படித் தடுப்பது?

பட மூலாதாரம், Serenity Strull/ BBC/ Getty Images

    • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஜிபிஎஸ் நமது திசையறியும் திறனைக் கெடுத்துவிட்டது. தேடுபொறிகள் நமது நினைவாற்றலை பலவீனப்படுத்துகின்றன. ஏஐ தொழில்நுட்பமும், படைப்பாற்றல் முதல் சிந்தனை வரை அனைத்திற்கும் இதே போன்ற நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, என்னால் இயன்றவரை அடிக்கடி ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன். நான் அதைப் பற்றி எழுதப் போகிறேன் என்றால், நானும் அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியாக வேண்டும் அல்லவா. ஆனால் கடந்த ஓராண்டு காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் புதிய ஆய்வுகள் என்னை கவலையடையச் செய்துள்ளன. இந்த செயல்பாட்டில் நான் எனது மூளையை சேதப்படுத்துகிறேனா?

சாட்ஜிபிடி போன்ற கருவிகளை அதிகம் சார்ந்திருக்கும் நபர்களுக்குப் படைப்பாற்றல், கவனக் குவிப்புத் திறன், விமர்சன ரீதியான சிந்தனை, நினைவாற்றல் மற்றும் பலவற்றில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏஐ பயனர்கள் சிந்தனையை கூர்மையாக்கும் ‘அறிவாற்றல் முயற்சியை’ கைவிட நேரிடலாம் என்றும், ஒரு சமூகமாக நம்மிடம் அசல் யோசனைகள் குறைவாகவே இருக்கக்கூடும் என்றும் மற்றவர்கள் கவலை எழுப்புகின்றனர். ஆனால் இது குறித்த அறிவியல் முற்றிலும் புதியது, இதற்கான பதில்கள் நம்மிடம் இல்லை. எனவே நாம் கவலைப்பட வேண்டுமா?

“பொதுவாக பார்த்தால், ஆம்,” என்கிறார் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் பேராசிரியராகவும், ரிலேஷனல் காக்னிஷன் ஆய்வகத்தின் இயக்குநராகவும் இருக்கும் ஆடம் கிரீன்.

By admin