சிகிச்சைக்காக லண்டன் செல்ல நவாசுக்கு அனுமதி

Advertisement

இஸ்லாமாபாத்:அண்டை நாடான பாக்.கின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 69 சிகிச்சை பெறுவதற்காக ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்குச் செல்வதற்கு அந்த நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு விதித்த தடையை நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

பாக்.கில் நீண்டகாலம் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஊழல் வழக்கில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல்நிலை
மோசமானதால் அவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் லண்டனில் சிகிச்சை பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. மருத்துவர்களும் இதற்கு பரிந்துரை செய்திருந்தனர்.

இந்நிலையில் ஊழல் வழக்குகளில்விசாரணை நடைபெற்று வந்ததால் விமானத்தில் பறப்பதற்கு தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. அது விலக்கி கொள்ளப்படாததால் லண்டனுக்கு செல்வதில் ஷெரீபுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி கூறியதாவது:ஷெரீப்பின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விமானத்தில் பறப்பதற்கு அவருக்கு
விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதமானதால் இந்த தடை
உடனடியாக விலக்கி கொள்ள முடியவில்லை. அவர் உடல்நிலை தேறுவதற்காக
பிரார்த்திக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நேற்று காலையில் லண்டன் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. தடை விலக்கி
கொள்ளப்படுவதால் அடுத்த சில நாட்களில் ஷெரீப் லண்டனுக்குப் புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

உலகின் உயரமான சிவலிங்கம் திறப்பு(1)

முந்தய

ஜார்கண்ட் தேர்தல் ; பா.ஜ பட்டியல் வெளியீடு(3)

அடுத்து

வாசகர் கருத்து