• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

சிங்களக் காடையர்களின் வெறியாட்டத்துக்கு எதிராகப் போராட்டம்!

Byadmin

Sep 19, 2023


திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் கவனயீர்ப்புப்  போராட்டம் இன்று முற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் தேவிபுரம் – வள்ளிபுனம் கிராம மக்கள் பிரதான வீதியில் ஒன்றுகூடி கைகளில் பதாதைகளைத் தாங்கியவாறு, மக்கள் எதிர்ப்புக் கோஷங்களை வெளிப்படுத்தி வள்ளிபுனம் சந்தி வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தியது மாத்திரமல்ல நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்குரியது என்றும், சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தார்கள்.

அவர்கள், “திருகோணமலை தமிழரின் தலைநகர், “தியாகி திலீபன் அகிம்சையின் அடையாளம்”, “தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இறந்தவர்களை வழிபடத் தடையா?”, “போராடுவோம் போராடுவோம்! தமிழ் மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்தும் போராடுவோம்”, “ஐ.நா. சபையே தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் உங்கள் கண்களுக்குத்  தெரியவில்லையா?”, “வடக்கு – கிழக்கு தமிழரின் தாயக பூமி”, “நிறுத்து நிறுத்து அடாவடியை நிறுத்து” போன்ற பல்வேறு வாசகங்களையுடைய பதாதைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பினார்கள்.

The post சிங்களக் காடையர்களின் வெறியாட்டத்துக்கு எதிராகப் போராட்டம்! appeared first on Vanakkam London.

By admin