0
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மகனும், நடிகருமான சூர்யா சேதுபதி கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ் -வீழான் ‘எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘யாராண்ட’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி சண்டை பயிற்சி இயக்குநரான அனல் அரசு , திரைப்பட இயக்குநராக அறிமுகமாகும் ‘பீனிக்ஸ் வீழான் ‘ எனும் திரைப்படத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி .எஸ் .இசையமைத்திருக்கிறார்.
குத்துச்சண்டை விளையாட்டு தொடர்பான திரைப்படமாக உருவாகும் இதனை ஏ கே பிரேவ்மேன் பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற :யாராண்ட’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியை வித்யா திமேத்திரன் எழுத, பின்னணி பாடகர் சிவம் பாடியிருக்கிறார்.
பின்னணி இசையில் தனக்கென தனித்துவமான பாணியை பின்பற்றும் இசையமைப்பாளர் சாம் சி. எஸ்ஸின் மயக்கும் மெட்டில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வடசென்னை மக்களின் வாழ்வியல் வார்த்தைகள் இடம் பிடித்திருப்பதால் ஒரு பிரிவு ரசிகர்களின் வரவேற்பினை பெற்றிருக்கிறது.