• Sat. Sep 7th, 2024

24×7 Live News

Apdin News

செப். 16-க்கு பதில் 17-ம் தேதி மீலாது நபி: தலைமை காஜி அறிவிப்பு | miladi nabi holiday on sept 17

Byadmin

Sep 6, 2024


சென்னை: மீலாது நபி செப். 16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

முகமது நபியின் பிறந்த நாளை மீலாது நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகி்ன்றனர். அன்று புனித நூலான குரானை வாசிப்பதை முக்கியமான கடமையாக கொண்டுள்ளனர். மேலும், ஏழை மக்களுக்கு உணவு, உடைகளையும் தானமாக வழங்குவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு செப்.16-ம் தேதி மீலாது நபி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மறுநாள் செப். 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘செப்.4-ம் தேதி புதன்கிழமை மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால், வெள்ளிக்கிழமை செப்.6-ம் தேதி முதல் ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆகையால், மீலாது நபி செவ்வாய்க்கிழமை செப். 17-ம் தேதி கொண்டாடப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin