சேலம் பவளவிழா மாநாட்டிற்கு நன்கொடை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர்கழக பவள விழா மாநாட்டிற்கு 17ஆவது கோட்ட திமுக செயலாளர் ஆ.மாசிலாமணி அவர்கள், மாவட்டச் செயலாளர் அ.ச.இளவழகனிடம் ரூ.10,000/- நன்கொடை வழங்கி சிறப்பித்தார்.உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன்.

தருமபுரி ஊமை ஜெயராமன் – தகடூர் தமிழ்ச்செல்வி இணையரின் குடும்ப நண்பர், சேலம் அண்ணாநகர், தொழிலதிபரும், பெரியார் பற்றாளருமான வி.தியாகராஜன் – தி.குமுதவள்ளி, பொறியாளர் வி.டி.விக்னேஷ் குடும்பத்தினர் சார்பாக, சேலம் பவள விழா மாநாட்டிற்கு ரூ.5,000/- நன்கொடையை, கழகத்தின் மாநில அமைப் பாளர்,  உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினார்கள். உடன்  சேலம் மாவட்ட செயலாளர் அ. இளவழகன், மாவட்ட அமைப் பாளர் ச.வே.ராவண பூபதி.

திராவிடர் கழக பவள விழா மாநாட்டிற்கு, சேலம் செல்வம் நகை மாளிகை உரிமையாளர் ஷி.இராசா அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன் அவர்களிடம் ரூ.5,000/ நன்கொடை வழங்கி சிறப்பித்தார். உடன் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்டச் செயலாளர் அ.ச.இளவழகன்.