• Wed. Dec 4th, 2024

24×7 Live News

Apdin News

ஜார்ஜியா: பெற்றோரை தேடிய தத்து கொடுக்கப்பட்ட பெண் – ஃபேஸ்புக்கில் நடந்த அதிர்ச்சி என்ன?

Byadmin

Nov 30, 2024


பேஸ்புக் மூலம் தந்தையை கண்டுபிடித்த பத்திரிகையாளர்

பட மூலாதாரம், Tamuna Museridze

தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா‌ மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார்.

தன்னை‌ப் பெற்ற தாயாக‌ இருக்கலாம்‌ என்று நினைத்த பெண்ணை கடைசியில்‌ கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது‌ தெரிந்தே இருந்தது.

ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை.

“தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினார், கூச்சலிட்டார். என்னுடன் பேச எதுவும் இல்லை” என்று அவர்‌ பேசியதை நினைவுகூர்ந்தார் தமுனா. அந்த பெண்ணின் பதிலால் வருத்தமடைந்ததை விட, தான் வியப்படைந்ததாக என கூறினார் தமுனா.

By admin