• Tue. Dec 3rd, 2024

24×7 Live News

Apdin News

டிரம்பின் புதிய நிர்வாகத்தினர் சிலருக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்!

Byadmin

Nov 29, 2024


அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கும் டோனல்ட் டிரம்ப், அவரது நிர்வாகத்தின்கீழ் செயல்பட நியமனம் பெற்ற சிலருக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் போலி வெடிகுண்டு மிரட்டல்களும் அடங்கும். பாதிக்கப்பட்டோரின் வீட்டிற்குச் சென்று பொலிஸார் விசாரணை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.

கடந்த இரண்டு நாளாக நடந்த சம்பவங்களை விசாரிப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி அதிபர் ஜோ பைடனுக்கும் மிரட்டல் சம்பவங்கள் குறித்துத் தகவல் அளிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்த நிலைமை கவனிக்கப்படுவதாகவும் மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.

The post டிரம்பின் புதிய நிர்வாகத்தினர் சிலருக்கு வெடிகுண்டு மிரட்டல்கள்! appeared first on Vanakkam London.

By admin