நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 45,448 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 19,487ஆகும்.
இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
The post டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! appeared first on Vanakkam London.