• Sun. May 19th, 2024

24×7 Live News

Apdin News

டோனியின் ஓய்வு குறித்து பதில் அளித்த சுரேஷ் ரெய்னா

Byadmin

May 14, 2024


சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில், இந்தப் போட்டியின் போது ஜியோ சினிமாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக வந்த சுரேஷ் ரெய்னாவிடம், அபினவ் முகுந்த் கேள்வி எழுப்பினார். அப்போது சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தான் டோனியின் கடைசி போட்டியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா கண்டிப்பாக இல்லை என்று கூறினார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவின் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

By admin