தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு: சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட  8 பேரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அதில்  4 பேர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று  தெரிவித்தார். சேலத்தில் 80 ஆயிரம் பேருக்கும், சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.