• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு தடை; தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டத்தில் கண்டனம்| Central government ban on Tamil Nadu projects; DMK – Condemnation in the meeting of MPs

Byadmin

Sep 17, 2023


சென்னை: தமிழகத்தின் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக, பார்லிமென்டில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளுடன் இணைந்து குரல் எழுப்ப, நேற்று நடந்த தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., – எம்.பி.,க்கள் கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், மகளிர் உரிமை திட்டத்தை துவக்கி வைத்த முதலவருக்கு நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

.

காவிரி நதி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்கும்படி, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

latest tamil news

மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை முடக்கி வைத்திருப்பதுபோல், இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிக்கான நிதி ஒதுக்கீட்டையும் செய்யவில்லை.

பிரதமரிடம் முதல் சந்திப்பிலேயே, முதல்வர் வலியுறுத்தியும், இன்று வரை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வைக்காமல், தமிழக உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு, மத்திய அரசு தடைக்கல்லை ஏற்படுத்தி வருகிறது.

‘நீட்’ தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை, இரண்டு முறை சட்டசபையில் நிறைவேற்றி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இது பா.ஜ., ஆட்சி தமிழகத்திற்கு செய்து வரும் துரோகம். நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, பார்லிமென்டில் தி.மு.க., குரல் எழுப்பும். பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தில், பார்லிமென்டிலும், சட்டசபையிலும், மகளிருக்கு, 33 சதவீதம் பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற, வலுவாக குரல் எழுப்பப்படும்.

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு துறைகளில், முழு ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள கிரீமிலேயர் வரம்பை, 25 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், சமூக நீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய கோரிக்கைகளோடு, இட ஒதுக்கீட்டிற்கு உள்ள, 50 சதவீத உச்சவரம்பு நீக்கம் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தப் படும்.

மத்திய அரசால் சமீபத்தில் அறிவித்துள்ள, ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை எதிர்த்து, எம்.பி.,க்கள் குரல் எழுப்புவர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், முற்றிலும் தோல்வி அடைந்த மத்திய பா.ஜ., அரசை, பார்லிமென்டில், இண்டியா’ கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

By admin