தமிழக பா.ஜ.,வில் சலசலப்பு!

Advertisement
tamil nadu, bjp, kushboo, joins bjp, தமிழக பா.ஜ., குஷ்பு, இணைவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர்கள், உள்ளுக்குள் குமுறுகின்றனர். இந்த வயதான தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில், நடிகை குஷ்பு கட்சியில் சேர்ந்தது, இவர்களது கோபத்தை அதிகமாக்கிவிட்டது.

‘பா.ஜ.,வை வசை பாடியவர்களையும், ரவுடிகளையும் கட்சியில் சேர்த்து, மக்களிடையே கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்’ என, புலம்புகின்றனர். இது தொடர்பாக புகார் தெரிவிக்க, பிரதமரையோ, கட்சியின் மூத்த தலைவர்களையோ சந்திக்க, டில்லிக்கு செல்வது இல்லை என்பதிலும், இவர்கள் உறுதியாக உள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் சென்று, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்து, இந்த விஷயங்களை கூறவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், டில்லி மேலிட தலைவர்களோ, இவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர், தலைவராக இருந்தபோது, இந்த அளவில் யாரும் கட்சியில் சேரவில்லை என்கின்றனர், அவர்கள். ‘இளம் தலைவர் ஒருவர், பரபரப்பாக கட்சி பணியாற்றும்போது, மூத்த தலைவர்களுக்கு எரிச்சல் இருக்கத் தானே செய்யும்’ என்கின்றனர்.

Advertisement
Dinamalar iPaper
சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி

சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி

முந்தய
ராகுல் இன்று வயநாடு பயணம்

ராகுல் இன்று வயநாடு பயணம்

அடுத்து

வாசகர் கருத்து