• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு பாஜகவில் புதிய ஒருங்கிணைப்புக் குழு – அண்ணாமலை திரும்பி வரும் போது என்ன நடக்கும்?

Byadmin

Sep 4, 2024


அண்ணாமலை, எச்.ராஜா, தமிழ்நாடு பாஜக

பட மூலாதாரம், @annamalai_k

படக்குறிப்பு, பாஜகவின் மாநிலத் தலைவரான அண்ணாமலை அரசியல் தொடர்பான படிப்பு ஒன்றுக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்றார்

தமிழக பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை படிப்பு ஒன்றுக்காக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் மாநிலத்தில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எச். ராஜா தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறது தேசியத் தலைமை. இந்த அறிவிப்பிற்குப் பிறகு பல்வேறு யூகங்கள் கிளம்பியிருக்கின்றன.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான கே. அண்ணாமலை ‘செவனிங் குருகுல்’ நிதி நல்கையில் (Chevening Gurukul Fellowship) ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வழங்கும் அரசியல் தொடர்பான படிப்பு ஒன்றுக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்றார். மூன்று மாதப் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் மாத இறுதியில் அவர் இந்தியா திரும்புகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே அண்ணாமலை மூன்று மாத காலம் படிப்பதற்காக வெளிநாடு செல்வது குறித்து பேச்சுகள் அடிபட்டு வந்தன. அண்ணாமலை வெளிநாடு செல்லும் சமயத்தில் மாநில பா.ஜ.கவின் தலைமைப் பொறுப்பு தற்காலிகமாக வேறு யாருக்காவது வழங்கப்படுமா என்பது குறித்த விவாதங்களும் நடந்துவந்தன.

இடைக்காலத் தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது வெளிநாட்டில் இருந்தபடியே கட்சிப் பணிகளை அண்ணாமலை கவனிக்கலாம் எனச் சொல்லப்பட்டு வந்தாலும் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. அண்ணாமலை இங்கிலாந்திற்குப் புறப்பட்டுச் சென்ற தினத்தில்கூட, இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை.

By admin