• Mon. Nov 28th, 2022

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் வன்முறை அதிகரிக்க என்ன காரணம்?

Byadmin

Nov 24, 2022


ஆசிரியர் மாணவர் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

தவறைக் கண்டித்த தலைமை ஆசிரியரின் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் தான் நடந்தது. மற்றொரு சம்பவத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுபோன்று மாணவர்கள் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் உளவியல் என்ன? இதற்குத் தீர்வு என்ன?

சம்பவம் 1: தலைமை ஆசிரியர் தலையை உடைத்த மாணவன்

படக்குறிப்பு,

சித்திரிப்புப்படம்

விழுப்புரம் கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மது போதையிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் சக வகுப்பு மாணவியைத் தவறாகப் பேசியுள்ளார்.

இது குறித்து அப்பள்ளி தலைவர் ஆசிரியர் சேவியர் ராமச்சந்திரனிடம் மாணவி புகாரளித்தார். பின்னர் சம்மந்தப்பட்ட மாணவனை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார்.