• Sun. Oct 6th, 2024

24×7 Live News

Apdin News

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம்! – அநுர அரசு வாக்குறுதி

Byadmin

Oct 2, 2024


தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். அந்தவகையில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம்.” – என்றார்.

The post தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தே தீருவோம்! – அநுர அரசு வாக்குறுதி appeared first on Vanakkam London.

By admin