• Mon. Nov 28th, 2022

24×7 Live News

Apdin News

தினமும் 4,500 பேருக்கு மெட்ராஸ் ஐ மூன்று நாள் தனிமை அவசியம்!| Dinamalar

Byadmin

Nov 22, 2022


சென்னை : ”தமிழகத்தில் தினசரி, 4,500 பேர் வரை, ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,” என, மக்கள்நல்வாழ்வுத் துறைஅமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

பரவல் தொடரும்

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில், ‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

பின், அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில், செப்டம்பர் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை, ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் பரவல் தொடரும்.

அந்த வகையில், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் இந்த பாதிப்பு உள்ளது.

latest tamil news

மாநிலம் முழுதும், தினசரி, 4,000 முதல் 4,500 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதல் இதுவரை, 1.5 லட்சம் பேர் வரை, ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்புக்கு சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.யாருக்கும் பார்வை இழப்பு ஏற்படவில்லை.

சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு அதிமாக உள்ளது.

இந்நோய் வைரஸ் தாக்குதலால் பாதிப்பை ஏற்படுகிறது.

கண்ணில் உறுத்தல், சிவப்பு நிறமாக மாறுதல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள். இந்த நோய் பாதிப்பு உள்ளோர், கண்களை கையால் தொடக்கூடாது.

அப்படி தொட்டு விட்டு, அருகே இருப்பவர்களை தொட்டால், அவர்களுக்கும் நோய் பரவும்.

சிகிச்சை

பாதிக்கப்பட்டவர் மூன்று, நான்கு நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

பயம் தேவையில்லை; பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். சுய சிகிச்சை, பாட்டி வைத்தியம் கூடாது.

எனவே, டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை கையாள்வது நல்லது. வீட்டில் ஒருவருக்கு பயன்படுத்திய மருந்தை, மற்றவர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்