உல,க, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சுதந்திர போராட்ட தியாகி, வ.உ.சிதம்பரம் பிள்ளையை பெருமைப்படுத்தும் விதமாக, சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது, திராவிட மாடல் அரசு. அதில், வ.உ.சி.,யின் ஒரிஜினல் கையெழுத்தில் உள்ள, ‘பிள்ளை’ என்ற சொல்லை நீக்கி அச்சிட்டுள்ளனர்.
‘ஜாதி மதம் இல்லாத, சமத்துவ சமுதாயம் அமைப்போம்’ என, கொள்கை முழக்கம் செய்து தம்பட்டம் அடிக்கும் திராவிட செம்மல்கள், வ.உ.சிதம்பரம் பிள்ளையை, வெறும், வ.உ.சிதம்பரம் என்று சுருக்கமாக அழைத்து அசிங்கப்படுத்தி, பேரின்பம் அடைகின்றனர்.
‘செய்வதையே சொல்வோம், சொல்வதையே செய்வோம்’ என்று கூறும் தி.மு.க.,வினர், இப்போது புதிதாக, ஒரு புரட்சியில் இறங்கி இருக்கின்றனர். அது என்ன தெரியுமா…

அதாவது, மாநிலம் முழுதும், தி.மு.க.,வில், ‘வார்டு’ அளவில் பொறுப்பில் உள்ளவர்களின் ஜாதி மற்றும் அவர்களது மொபைல் போன் எண் விபரத்தை, கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கும்படி, வட்டச் செயலர் மற்றும் ஒன்றியச் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, அவர்களும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது, தி.மு.க., நிர்வாகிகளுக்கு சொல்ல முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.
இந்த விஷயத்தில், முதல்வர் ஸ்டாலின் உடனே தலையிட்டு, ஜாதி விபரங்கள் கேட்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அடிக்கடி சொல்வதற்கு என்ன அர்த்தம் என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
வ.உ.சி., தன் வாழ்நாள் முழுதும், ‘வ.உ.சிதம்பரம் பிள்ளை’ என்றே கையெழுத்திட்டு வந்துள்ளார். தற்போது, பிள்ளை என்ற சொல்லை நீக்கியதன் வாயிலாக, அவரின் அடையாளத்தை மறைக்க, தி.மு.க., அரசு முற்பட்டுள்ளது. தி.மு.க.,வில், உள்ளாட்சி, சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் போதெல்லாம், அங்கு ஜாதிய ஆதிக்கமே மேலோங்கி இருக்கும் என்பது ஊரறிந்த உண்மை.
எந்தத் தொகுதியில் எந்த ஜாதிக்கு அதிக ஓட்டுகள் உள்ளன என்ற அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்வு நடக்கும். அதை தவறாக நினைக்காத திராவிட செம்மல்கள், வ.உ.சி., கையெழுத்தில் உள்ள, பிள்ளை என்ற சொல்லை நீக்கியது, எப்படி நியாயமானதாகும்?
‘ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல’ என்று சொல்லியபடியே, அதற்கு எதிராக செயல்படும், தி.மு.க.,வினர், பிள்ளை என்ற ஜாதி பெயரை நீக்கியதன் வாயிலாக, தங்களின் இரட்டை வேடத்தை, மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்