• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

துருக்கி ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் இராஜினாமா

Byadmin

Sep 17, 2023


துருக்கியில் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் ஜனாதிபதிதாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு அமைச்சு பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர்.

எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் அவர்கள்அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்தநிலையில் அங்கு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆலோசகர்கள் 15 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

By admin