நவராத்திரி விழா இன்று முதல் தொடக்கம்.. களைகட்டும் கொலு பொம்மைகள் விற்பனை.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நவராத்திரி விழா இன்று தொடங்கியுள்ளதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கொலு பொம்மைகள் விற்பனை களைகட்டியுள்ளது.

Advertisement

இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி, கோட்டாறு, போன்ற பல்வேறு பகுதிகளில் கொலு பொம்மைகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து விதவிதமான கொலு பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

50 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கொலு பொம்மைகள் விற்கப்படும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement