சென்னை: நாட்டின் 74வது குடியரசு தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயக கடமையை உணர்ந்து குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட நாம் உறுதியேற்போம் என தமிழிசை தெரிவித்துள்ளார். நம்நாடு பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாப்பது மக்கள், ஒன்றிய, மாநில அரசுகளின் கடமையாகும் என வாசன் கூறியுள்ளார்.