• Sat. Jul 13th, 2024

24×7 Live News

Apdin News

நியாண்டர்தால்: 40,000 ஆண்டுகள் முன் வாழ்ந்த சிறுமியின் காது எலும்பு சொல்வது என்ன?

Byadmin

Jul 10, 2024


நியாண்டர்தால்

பட மூலாதாரம், Getty Images

ஒரு சமூகத்தில் வாழ்வதும், மற்றவர்களைப் பராமரிப்பதும் நம் இனம் வாழ்வதற்கு மட்டும் வழிவகை செய்யவில்லை. பல நூறு கோடி ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடையவும் உதவியுள்ளன.

பல ஆராய்ச்சியாளர்கள் கோட்பாட்டு அளவில் இதை நம்பிவந்திருந்தாலும், ஸ்பெயின் நாட்டில் அரிய புதைபடிவமான ஒரு சிறிய எலும்பு மீது நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளும் அதையே உறுதி செய்கின்றன.

1989-ஆம் ஆண்டு ஸ்பெயினின் வேலன்சியா நகரில் அமைந்திருக்கும் கோவா நேக்ரா குகையில், புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் 5 செ.மீ அளவு நீளமான ஓர் எலும்புத் துண்டைக் கண்டெடுத்தனர். நியாண்டர்தால் காலத்தைச் சேர்ந்த 6 வயது மிக்க நபர் ஒருவரின் காது எலும்பு அது.

இந்த எலும்பு ஆணுடையதா, பெண்ணுடையதா என்பது நிரூபிக்கப்பட முடியாத சூழலில், ஆய்வுக்குழுவினர் அது ‘டீனா’-வின் எலும்பு என்று குறிப்பிடுகின்றனர்.

By admin