• Sat. Jan 28th, 2023

24×7 Live News

Apdin News

பதான்: 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாரூக் கான் நடிக்கும் படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

Byadmin

Jan 22, 2023


பதான்: 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஷாரூக் கான் நடிக்கும் படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

பட மூலாதாரம், YRF

பாலிவுட்டில் ஷாரூக் கான் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து  தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. 

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் அதிக விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவரான ஷாரூக் கான் மீதான ஆர்வம் இயல்பான ஒன்றுதான். வசீகரமான, வேடிக்கையான, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அவர் பல நேரங்களில், ‘பாலிவுட்டின் மிக முக்கியமான கலாசார ஏற்றுமதி’ என்று வர்ணிக்கப்படுகிறார். அவரது ரசிகர்களோ ஷாரூக் கானை ‘கிங் கான்’ ‘பாலிவுட்டின் ராஜா’ என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.