• Fri. Nov 7th, 2025

24×7 Live News

Apdin News

பாகுபலி தி எபிக் விமர்சனம்: 2 பாகங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்ட புதிய படம் எப்படி உள்ளது?

Byadmin

Nov 1, 2025


பாகுபலி தி எபிக்

பட மூலாதாரம், FB/Baahubali

‘பாகுபலி – தி எபிக்’ (Baahubali – The Epic) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 2015-இல் பரபரப்பை ஏற்படுத்தி, 2017-இல் பாகம்-2 ஆக வந்த இரண்டு திரைப்படங்களையும் சேர்த்து, ஒரே படமாக மீண்டும் வெளியிட்டுள்ளனர். இது எப்படி இருக்கிறது?

கதை அனைவருக்கும் தெரியும். முதல் பாகத்தில், மகேந்திர பாகுபலி, மகிழ்மதிக்குச் சென்று தாய் தேவசேனாவை விடுவிக்கிறான். அவனது தந்தை அமரேந்திர பாகுபலி பற்றி கட்டப்பா கூறுகிறார்.

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? இந்த சஸ்பென்ஸை இரண்டு ஆண்டுகள் தாங்கிக் கொண்டுதான் ரசிகர்கள் பாகம்-2 ஐ பார்த்தனர்.

இரண்டாம் பாகத்தில், பாகுபலி – தேவசேனா காதல், சிவகாமி தவறாகப் புரிந்து கொள்வது, பல்வால் தேவனின் சதி, இறுதியாக வில்லனின் அழிவு ஆகியவை இடம்பெற்றன.

பாகுபலி தி எபிக்

பட மூலாதாரம், FB/RANA

இது ஒரு எடிட்டிங் அற்புதம்…

இரண்டு பாகங்களும் எடிட் செய்யப்பட்டு, 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடக்கூடிய நீளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. இடைவேளை வரை முதல் பாகமும், அதன் பிறகு மீதிக் கதையும் வருகிறது.



By admin