• Sun. Sep 8th, 2024

24×7 Live News

Apdin News

பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்! | Vanathi Srinivasan went to Paris to congratulate the Indians who achieved in the Paralympics

Byadmin

Sep 4, 2024


கோவை: பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர். பாரிஸ் நகரில் தமிழக வீராங்கனைகள் உள்ளிட்ட பாராலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாரிஸ் நகரின் ஈபிள் டவர் முன் அவர்களுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



By admin