• Fri. Sep 22nd, 2023

24×7 Live News

Apdin News

பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம்- உதயநிதி ஸ்டாலின் | We will beat the slave masters in the parliamentary elections

Byadmin

Sep 17, 2023


தி.மு.க. பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா வேலூர் அடுத்த பள்ளிகொண்டா கந்தனேரியில் இன்று மாலை நடைபெற்றது.

முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று கருணாநிதி கூறுவார். இயக்கத்தை மட்டுமின்றி இங்குள்ள எந்தவொரு கிளை செயலாளரையும் கூட தொட்டுக் கூட பார்க்க முடியாது. இப்போது திமுகவில் பல்வேறு அணிகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளைஞரணி சார்பில் நூலகம், பேச்சுப் போட்டி, மாரத்தான் போட்டிகளை நடத்துகிறது.

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்கள். நான் இப்போது வேலூர் வந்த போதும், என்னைச் சூழ்ந்து கொண்டு இந்தத் திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்கள். இந்தியாவிலேயே மிகப் பெரிய திட்டமாக இது இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய மாநாடாக இளைஞரணி மாநாடு இருக்கும்.

சட்டமன்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளுடன் சேர்த்து, அடிமைகளின் எஜமானர்களை விரட்டி வீட்டுக்கு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

By admin